வாந்தி வருவதாக கூறிய ஆற்றில் குதித்த புதுமணப்பெண்
மத்திய பிரதேச மாநிலம் சியோப்பூரில் புதுமணப் பெண் ஒருவர் திடீரென ஆற்றில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் இருந்து சியோப்பூருக்கு அந்த திருமண ஜோடி சென்று கொண்டிருந்தது. பாலி போல் என்ற இடத்தின் அருகே தமக்கு வாந்தி வருவதாக அந்த புதுமணப்பெண் வாகனத்தை நிறுத்த சொல்லியுள்ளார்.
உடனடியாக சம்பளத்தில் அந்த வாகனம் நிறுத்தப்பட்ட போது அதிலிருந்து இறங்கிய புதுமணப் பெண் திடீரென ஆற்றில் குதித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆற்றில் குதித்த பெண்ணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .ஆற்றில் குதித்த காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.






