--- --:--:-- --

கடலூர் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு கடும் சோதனை!

8

கடலூர் மாவட்ட எல்லையில் வாகனங்களில் வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பு நடவடிக்கை மிகச் சிறப்பாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 16,386 பேருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டது.

 

அதில் 531 பெருக்கு கொரொனா தொற்று உறுதி ஆகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் கொரொனா சோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த சோதனையில் 531 பேருக்கு கொரொனா பாசிடிவ் என கண்டறியப்பட்டது .

 

அதில் கிட்டத்தட்ட 463 பேர் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையிலிருந்து பெரும்பாலோனோர் அனுமதியின்றி உள்ளே நுழைவதாகவும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கடலூர் மாவட்ட எல்லை வரை வந்து கடலூர் மாவட்ட எல்லைக்கு மாற்று வாகனங்களின் மூலம் உள்ளே புகுந்து விடுகின்றனர்.

 

அம்மாதிரியான நபர்களால் மிகவும் சிரமம் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் அனைத்து வாகனங்களையும் கடலூர் மாவட்ட எல்லையில் நிறுத்தி சோதனை மேற்கொள்கின்றனர். அதில் ஒரு சிலருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு பி‌சி‌ஆர் சோதனை எடுக்கப்படுகிறது.

 

குறிப்பாக விழுப்புரம் மற்றும் திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கும் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon