பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
கொரொனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குனர் பல்ராம் பார்க்கவா மற்றும் மத்திய அரசில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கொரொனா பரவல் குறித்த தற்போதைய நிலை குறித்து விவாதித்த பிரதமர் டெல்லி , மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து பிரதமர் கேட்டறிந்துள்ளார். அப்போது அவசர காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி வரும் 16, 17 ஆகிய தேதிகளில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் இந்த உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதனிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.







