--- --:--:-- --

நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்!

1

நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் கொண்டு செல்லப்பட்ட மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை நோக்கி வந்த சொகுசு காரை மறித்துசோதனையிட்டபோது நூற்றுக்கும் அதிகமான மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

 

அந்த காரில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் மதுபாட்டில்களை கொண்டுவந்ததாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுனரை கைது செய்தனர். அவரை நடிகை ரம்யா கிருஷ்ணனும் அவரது சகோதரி அபிநயா கிருஷ்ணன் அழைத்து சென்றனர்.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் மது விற்பனை தடை செய்யப்பட்ட நிலையில் ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் எடுத்து வரப்பட்டதால் அவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon