--- --:--:-- --

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது!

0.8

நெல்லையிலுள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடைக்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைக்கப்பட்டுள்ளது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நகைக்கடையில் பணி புரியும் ஊழியர்கள் ஆறு பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவ பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நகைக்கடையில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை என நெல்லை மாநகராட்சி நிர்வாகம் வருகிற 15ஆம் தேதி வரை நகைக்கடையை மூட உத்தரவிட்டு மாநகராட்சி அலுவலர்களால் கடைக்கு சீல் வைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிப்பு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon