10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான விவரங்கள் வழங்க வேண்டும்!
10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் வருகைப்பதிவேடு ஆகியவற்றை அனைத்து பள்ளிகளும் வரும் 12-ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தாக்கம் அதிகரிப்பால் பத்தாம் வகுப்பு தேர்வு முழுமையாகவும் பதினொன்றாம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகை பதிவேடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது.
இதற்காக அனைத்து தலைமை ஆசிரியர்களும் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் விடைத்தாள்கள் மற்றும் வருகை பதிவேட்டை வரும் 12ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.






