--- --:--:-- --

புலம்பெயர் தொழிலாளர்களை விமானம் மூலம் மீட்டுள்ள நடிகர் அமிதாப்பச்சன்!

8

மும்பையில் சிக்கி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 700 பேர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் உதவியால் சொந்த ஊர் சென்றனர். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 700க்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் கொரொனா ஊரடங்கால் மும்பையில் சிக்கி இருந்தனர்.

 

பலர் நடந்தும் மிதிவண்டிகளில் சொந்த ஊர் செல்ல வேண்டிய நிலையில் அவர்களுக்கு நடிகர் அமிதாப்பச்சன் உதவியுள்ளார். தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பி வைக்க நான்கு தனி விமானங்களை ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கிறார் அமிதாப் பச்சன். லக்னோ, அலகாபாத் ஆகிய நகரங்களுக்கு தொழிலாளர்களுடன் விமானங்கள் சென்றனர்.

 

புலம்பெயர் தொழிலாளர்களை முதலில் ரயிலில் அனுப்பி வைக்கத் திட்டமிட்டார். அதற்கான சூழல் இல்லை என்பது தெரியவந்ததும் சற்றும் யோசிக்காமல் விமானம் மூலம் அனுப்பிவைத்தார். சொந்த ஊர் சென்று சேர்ந்த நிம்மதியில் அமிதாப்பிற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon