--- --:--:-- --

மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமானது : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

13

மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமானது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். கருப்பினத்தவர் ஜார்ஜின் மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

கடந்த 2ம் தேதி இரவு அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் வாஷிங்டனில் இந்திய தூதரகம் அமைந்துள்ள வீதியில் மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்தியது. இதுகுறித்து இந்திய தூதரகம் புகார் அளித்துள்ளது. இதனால் சிலையை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

 

இந்த நிலையில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது அவமானகரமான செயல் என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் தெரிவித்தார். அண்மையில் டிரம்பும் அவரது மனைவி மேலானியாவும் இந்தியா வந்திருந்தபோது அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தில் சென்று பிரதமர் மோடியுடன் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon