--- --:--:-- --

மனைவி தவறான தொடர்பு வைத்திருந்ததால் மனைவியை கொலை செய்த கணவன்!

11

வேலூர் அருகே வேறு ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்ததாக கூறப்படும் மனைவியை அடித்துக் கொன்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் போலீசில் சரணடைந்தார். கம்மம்மான் பேட்டையை சேர்ந்த செல்வம் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றபின் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

 

இவரது மனைவி சித்ரா அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் தவறான தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அவனுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும் கூறப்படும் நிலையில் மகளையும் அடித்துள்ளார்.

 

இதனை அறிந்து ஊருக்கு வந்து செல்வம் மனைவியை கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பஜ்ஜி தேக்கும் கட்டையால் சித்ராவின் தலையில் அடித்ததில் அவர் உயிரிழந்ததை பார்த்த செல்வம் காவல் நிலையம் சென்று சரண் அடைந்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon