கடைகளுக்கான 3 மாத வாடகையை தர வேண்டாம் எனக் கூறிய மனிதாபிமானம் உள்ள மகப்பேறு மருத்துவர்!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் 3 மாத வாடகையான 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கொடுக்க வேண்டாம் எனக்கூறி கடை உரிமையாளர் ஒருவர் வணிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பட்டுக்கோட்டை பெரிய தெருவில் கிளினிக் வைத்து நடத்தி வரும் 91 வயது மகப்பேறு மருத்துவர் கனகரத்தினம் தமக்கு சொந்தமான கட்டடத்தில் ஆறு கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார்.
அந்த கடைகள் அனைத்தும் ஊரடங்கு காலத்தில் பூட்டப் பட்டிருந்த நிலையில் வாடகை எப்படி கொடுப்பது என வியாபாரிகள் கவலையுடன் இருந்தனர். வியாபாரிகளின் நிலையை புரிந்துக் கொண்ட கனகரத்தினம் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கான வாடகையை தர வேண்டாம் என்று வியாபாரிகளிடம் கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.







