--- --:--:-- --

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மீண்டும் மாற்றப்படுமா..?

9.1

பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

 

வரும் 15ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்திருக்கும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைக்கக் கோரி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எதிர் கட்சிகள் அறிவித்துள்ளன.

 

திமுக தலைவர் மு க ஸ்டாலின் ,கே எஸ் அழகிரி, வைகோ உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தேர்வை விட மாணவர்கள் உயிர் முக்கியம் என்பதை வலியுறுத்தும் விதமாக அவரவர் இல்லங்களில் தனிமனித இடைவெளியுடன் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon