--- --:--:-- --

இந்தியா – சீனா இடையேயான லடாக் எல்லைப் பிரச்சனையில் முன்னேற்றம்!

3

லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா – சீனா இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன படைகள் பின் வாங்குவதால் பதற்றம் தணிந்தது. இந்தியா – சீனா இடையிலான லடாக் எல்லை பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

 

10 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் கிடைக்காததால் இம்முறை ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்திய தரப்பில் லெப்டினன் ஜெனரல் ஹரேந்திர சிங், சீனா தரப்பில் மேஜர் ஜெனரல் பங்கேற்றனர். சீனாவின் கட்டுப்பாட்டுக்கு கிழக்கு லடாக் பகுதியில் உள்ள மால்டோ என்கிற இடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

 

பேச்சுவார்த்தைக்கு முன்பே இரண்டு பக்கங்களிலும் தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்த தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தனர் என்றும் பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமான முறையில் நடைபெற்றது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

இந்திய முகாம்களுக்கு அருகே உயரமான இடங்களில் சீன ராணுவத்தினர் முகாம்கள் அமைத்துள்ளதாகவும் இது இந்திய முகாம்களை அச்சுறுத்தும் வகையிலேயே உள்ளதாகவும் சீன ராணுவ பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. பாங்காங் ஏரி மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் மண் சாலைகளை வலுமைப்படுத்தியது ஏன் என்று கேள்வி கேட்டு அந்தப் பகுதிகளில் அதிகளவு கனரக வாகனங்களை சீனா இயக்குகிறது என்பதையும் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

சீன ராணுவம் தன் தரப்பிலே இந்தியாவும் அந்த பகுதியில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கிறது என்றும் இதை தவிர அருகில் உள்ள தலங்களில் பீரங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது என்று பதில் புகார் அளித்துள்ளது. அதே சமயத்தில் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள் விட்டு கொடுக்கப்பட மாட்டாது என்றும் இரு தரப்பும் தெளிவுபடுத்தியுள்ளன.

 

ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் அதே சமயத்தில் தூதர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் காரணமாக சீன ராணுவத்தினர் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலேயே தங்களுடைய எண்ணிக்கைகளை குறைக்க முன்வந்துள்ளார்கள்.

 

அதிகாரப்பூர்வமாக இது தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றாலும் முன்பு டோக்லாம் பகுதியில் நடந்தது போலவே கொஞ்சம் கொஞ்சமாக கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் அவர்களின் முகாம்களை சற்றுப் பின்னுக்கு கொண்டு செல்ல தொடங்கியுள்ளார்கள் என இந்திய ராணுவத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

இந்தியா சீனா இடையிலான எல்லை பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைகளை தொடர இரண்டு தரப்புமே வலியுறுத்தியுள்ளன. இந்தியாவுடன் நட்புடன் இருக்க விரும்புவதாகவும் அமெரிக்காவின் தவறான வழிகாட்டுதல் காரணமாக பாதை மாறி விடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

இந்தியாவும் பல்வேறு மட்டங்களில் பிரச்சனைகளை பெரிதாக்க தாங்கள் விரும்பவில்லை என்றும் பதற்றத்தை தணிக்க முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை தொடர்பான பதற்றம் தணிய தொடங்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon