--- --:--:-- --

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் எழுதியுள்ள கடிதம்!

3

ஜல் ஜீவன் திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துமாறு தமிழக முதலமைச்சருக்கு மத்திய நீர்வள அமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார்.

 

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024 க்குள் வீட்டுக் குழாய் இணைப்புகளின் மூலம் பாதுகாப்பான தண்ணீரை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் இந்த இலக்கை எட்டுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் எனவும் மத்திய நீர்வள அமைச்சர்கூறியுள்ளார்.

 

2019 – 2020 இல் 13.86 லட்சம் வீடுகளுக்கு தண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற இலக்கை ஒப்பிடுகையில் குறைவான வீடுகளுக்கு இணைப்புகள் தமிழ்நாடு அரசு வழங்கி இருப்பதாக சுட்டிக் காட்டியிருக்கும் அமைச்சர் இதற்காக தமிழகத்திற்கு 373 கோடியே 10 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டதாகவும் ஆனால் மார்ச் 2020 இறுதிவரை 114 கோடியே 58 லட்சம் ரூபாய் மட்டுமே மாநில அரசு பயன்படுத்த முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த திட்டத்தின் விளைவாக பொது தண்ணீர் ஆதாரங்கள் பொது குழாய்கள் மக்கள் கூட்டமாக நிற்கத் தேவையில்லை என்று கூறியிருக்கும் அமைச்சர் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் குழாய் இணைப்புகளை வழங்குமாறும் 100% வீட்டுக் குழாய் இணைப்புகளைக் கொண்ட மாநிலமாக மாற்ற தேவைப்படும் நிதி வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon