--- --:--:-- --

மதுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா டாக்டர் சரவணன் எம் எல் ஏ முன்னிலையில் நடைபெற்றது!

4.1

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி தலைமையில் திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் முன்னிலையில் மற்றும் பொறுப்புக்குழு நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

மேலும் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பெருங்குடியில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கும், கழகத்தினருக்கும் இனிப்புகளை வழங்கினார் மேலும் அன்னை மறுவாழ்வு மையத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.அதனை தொடர்ந்து தனக்கன்குளத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

மேலும் அதனைத் தொடர்ந்து அண்ணாநகர், செல்லூர், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன், வட்ட கழக பொறுப்பாளர்கள் மணிகண்டன்,கருப்புராஜா, ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் உடனிருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon