சென்னையில் அதிகரித்து கொண்டே போகும் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை! சமூக பரவல் நிலையை எட்டியதா?
தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரொனா பரவல் வேகத்தைவிட சென்னையில் தொற்றின் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சென்னையில் சமூக தொற்று ஏற்பட்டு விட்டதா என்ற அச்சமும் அதிகரித்துள்ளது. நாட்டிலேயே மும்பைக்கு அடுத்தபடியாக கொரொனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்கிறது சென்னை.
கடந்த இரு மாதங்களில் இடையில் சில நாட்கள் தவிர சென்னையில் கொரொனா தொற்று கண்டறியப்படுவது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 800 ஐ தாண்டும் நிலையில் விரைவில் ஆயிரத்தை தொடும் என்றும் அஞ்சப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் கொரொனா கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் சென்னையில் மட்டும் வைரஸின் வீச்சு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடந்த மே ஒன்றாம் தேதி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு களின் எண்ணிக்கை 2,526 ஆக இருந்த நிலையில் இது சென்னையில் மட்டும் ஆயிரத்து 882 தொற்றுகள் இருந்தன. தமிழகத்தில் சென்னையில் பங்கு சுமார் 42 சதவீதம் இந்த நிலையில் மே மாதத்தின் கடைசி நாளில் தமிழகத்தில் 22 ஆயிரத்து 333 பேருக்கு தொற்று இருந்த நிலையில்சென்னையில் மட்டும் அது 14 ஆயிரத்து 802 ஆக இருந்தது.
அதாவது தமிழக பாதிப்புகளில் சென்னையில் பங்கு 66 சதவீதமாக உள்ளது. இந்த புள்ளி விவரமே பிற மாவட்டங்களை விட சென்னையில் பரவல் அதிகரித்து வருவதை உணர்த்துகிறது. மறுபுறம் தமிழகத்தில் கொரொனாவுக்கு 173 பேர் உயிரிழக்கும் நிலையில் இதில் சென்னையில் மட்டும் 129 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் சமூக பரவாயில்லை என்று அரசும், அரசின் மருத்துவ நிபுணர் குழுவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சென்னையில் கொரொனாவால் பாதிப்புற்ற பலர் கொரொனா தொற்று எங்கிருந்து வந்தது என தெரியவில்லை எனக் கூறுகிறார்கள். யாரிடமிருந்து தொற்று பரவியது என்பது தெரியவில்லை என்றாலே அது சமூக பரவல் தான் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
சமூக பரவல் என்ற கட்டத்தை என்னை தொட்டு பல நாட்கள் ஆகிவிட்டது என்று கூறுகின்றனர் நிலைமையை கூர்ந்து கவனித்து வரும் மருத்துவ வல்லுனர்கள். கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சமூக பரவல் குறித்த முரண்பாடான தகவல்கள் மக்களின் கவலையை அதிகரிக்கவே செய்கிறது.






