மனோபாலா கேட்ட கேள்விக்கு சிங்கமுத்து தரக்குறைவாக பேசியதாக வடிவேலு இருவர் மீது புகார்!
நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சங்கத்தில் நடிகர் வடிவேலு புகார் அளித்திருக்கிறார். அதில் மனோபாலா நடத்திவரும் யூடியூப் சேனலில் சிங்கமுத்து நேர்காணல் அளித்ததை குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த நேர்காணலில் தன்னைப் பற்றி மனோபாலா கேட்ட கேள்விக்கு தரக்குறைவாக பேசியதுடன் தவறான தகவல்களையும் சிங்கமுத்து தெரிவித்திருப்பதாக புகார் கூறியிருக்கிறார். மேலும் அந்த வீடியோவை பிரபல நடிகர்கள் இடம் பெற்றுள்ள நடிகர் சங்கம் வாட்ஸ்அப் குழுவில் மனோபாலா பகிர்ந்தது தனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மனோபாலா மற்றும் சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சங்க சிறப்பு அதிகாரிக்கு கடிதம் மூலம் நடிகர் வடிவேலு புகார் அளித்திருக்கிறார் . ஏற்கனவே தனக்கும் சிங்கமுத்து விற்கும் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதையும் கடிதத்தில் வடிவேலு குறிப்பிட்டுள்ளார்.






