அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்!
கொரொனா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் கொரொனா சிகிச்சைக்காக பெரும் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முக ஸ்டாலின் கொரொனா காலத்திலும் தனியார் மருத்துவமனைகளில் முறைகேடுகள் நடப்பதை அனுமதிப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில் சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது நடந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரொனாவுக்கு சிகிச்சை பெறும் மக்களுக்கு உதவ தமிழக அரசு முன்வர வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.






