--- --:--:-- --

சென்னை மருத்துவமனையில் உள்ள தலைமை செவிலி உயிரிழப்பு! காரணம் கொரொனாவா?

6

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தலைமை செயலாளர் ஜான் மெரி பிரிசில்லா கொரொனாவால் உயிரிழக்கவில்லை என மருத்துவமனை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால் அவரது பரிசோதனை அறிக்கையில் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

 

நல்லூரை சேர்ந்த 58 வயதான செவிலி ஜான் மெரி பிரிசில்லா செவிலியர்களுக்கான பணி நேரம் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கவனித்து வந்தவர். கடந்த 26ஆம் தேதி முதல் உடல்நலக்குறைவால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் 27ம் தேதி 11 மணியளவில் அவர் உயிர் இழந்தார். இந்த நிலையில் மார்ச் மாதம் பணி ஓய்வு பெற்ற இந்த செவிலியர் கட்டுப்பாடற்று நீரிழிவு நோய், சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதய நோயால் உயிரிழந்ததாகவும் அவருக்கு கொரொனா தொற்று இல்லை என்றும் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

 

அவர் கொரோனாவால் உயிரிழந்ததாக தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon