--- --:--:-- --

2 மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை..! கொடூர செயல்!

3.1

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இரண்டு மாத பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அந்தியூர் அருகே பந்தல் தொழிலாளியான துளசிமாதன் என்பவருக்கு 11 வயதில் மகன் இருக்கும் நிலையில் 65 நாட்களுக்கு முன்பு இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மகளிர் குழுவிற்கு பணம் செலுத்த மனைவி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய போது பெண் குழந்தையை துளசிமாதன் பாலியல் துன்புறுத்தல் செய்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. தாய் கொடுத்த புகாரின் பேரில் குழந்தையின் தந்தை துளசிமாதனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.

Leave a Reply

Right Menu Icon