--- --:--:-- --

நாளை ரமலான் தொழுகை முடிந்து கைகுலுக்கல், கட்டியணைத்தல் உள்ளிட்டவை கூடாது!

17

தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலானையொட்டி ஒரு மாதமாக அவர்கள் நோன்பு இருந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நேற்று பிறை தெரியாததால் திங்கட்கிழமை அதாவது நாளை ரமலான் பெருநாள் கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதேபோல டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத் அகமது புகாரியும் நாடு முழுவதும் திங்கள்கிழமை ரமலான் கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார் .

 

அதேநேரம் கொரொனா பரவலை கட்டுப்படுத்த அரசு நிபந்தனைகளை முழுமையாகக் கடைபிடித்து ரமலான் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கைகளை குலுக்குவது, கட்டி அணைப்பது போன்ற சடங்குகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon