--- --:--:-- --

பாகிஸ்தான் விமான விபத்தின் வீடியோ வெளியானது! இதன் மூலம் கிடைத்த தகவல் என்ன?

4.2

பாகிஸ்தான் விமான விபத்து தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தரையிறங்க அனுமதி பெற்று விமான வருகைக்காக ஓடு பாதையும் காத்திருந்த வேளையில் கண்ணிமைக்கும் நொடியில் விபத்து நடந்துள்ளது.

 

நாகூரில் இருந்து வந்து கொண்டிருந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ்க்கு சொந்தமான பீகே 8303 விமானம் கராச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு அனுமதி கிடைத்தது. ஓடு பாதையும் விமானத்தை வரவேற்க தயாராக இருந்தது. சில நிமிடங்களில் தரையிறங்க வேண்டிய விமானத்தின் எஞ்சின் திடீரென பழுதடைந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் தீயில் கருகின.

 

விமான விபத்தில் சிக்கியது ஒருபுறம் வேதனை என்றால், குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தது மேலும் ரணத்தை உண்டாக்கியுள்ளது. விமானம் விழுந்த பகுதியில் இருந்த வீடுகள், வாகனங்கள் ஆகியவை தீப்பற்றி எரிந்ததால் உயிரிழப்புகள் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

 

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 97 பேர் உயிரிழந்ததாகவும் இரண்டு பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. திடீரென விமானம் விழுந்தது என்றும் தன்னைச்சுற்றி குழந்தைகளின் அழும் சத்தம் கேட்டது என்றும் விமான விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய முகமது ஜாபர் கூறுகிறார்.

என்ன நடந்தது என்றே தெரியவில்லை என கதறும் அவர் தான் உயிர் பிழைக்க கூடும் என நினைக்கவே இல்லை என்றும் விபத்து ஏற்பட்ட இடம் முழுவதும் நெருப்பால் சூழப்பட்ட இருந்ததாகவும் கூறுகிறார். இதற்கிடையில் விமானம் கீழே விழுந்து நொறுங்கும் அந்த கடைசி நிமிட வீடியோ காட்சிகள் வெளியாகி மனதை பதைபதைக்க வைக்கின்றன.

 

குடியிருப்புக்குள் விழுந்த விமானம் தீப்பற்றி எரிந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். விபத்து ஏற்பட்ட இடம் குறுகலான பாதை கொண்ட இடமாக இருப்பதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. எத்தனையோ, ஆக்கபூர்வமான தொழில்நுட்பங்கள் இருந்தாலும் விமான விபத்தில் பல உயிர்கள் அடையாளம் தெரியாமல் அழிந்து போகும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon