--- --:--:-- --

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உதவித் தொகை வழங்கினார்!

4.3

தமிழ்நாடு அரசு கோவிட் -19 தடுப்பு முன்னெச்சரிக்கையாக பிறப்பிக்கப்பட்ட பொது ஊரடங்கு உத்தரவினைத் தொடர்ந்து , இராமநாதபுரம் மாவட்டம் சமூகநலத் துறையின் மூலம் நல வாரியங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு வாழ்வாதார தேவைகளுக்கு உதவிடும் வகையில் முதற்கட்டமாக ரூ .1000/ – வீதம் 119 நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது .

 

மேலும் நல வாரியத்தின் மூலமாக குடும்ப அட்டை பெற்ற 70 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களான 12 கிலோ அரிசி , 1 கிலோ பருப்பு , மற்றும் 1 கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இரண்டாவது கட்டமாக ரூ .1000 / – வீதம் 119 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் உதவித் தொகை வழங்கினார். இந்நிகழ்வின்போது ,  மாவட்ட சமூக நல அலுவலர் வி.ஜெயந்தி உடனிருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon