--- --:--:-- --

தினமும் 60 கி.மீ பயணம் செய்து மக்களுக்காக பாடுபடும் தூய்மை பணியாளர்!

3

கொரொனா நோய் தடுப்பு பணியில் மருத்துவர், செவிலியர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அர்ப்பணிப்பு அளவிடற்கரியது. இந்த வகையில் கரூரில் தினமும் 60 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து தூய்மைப் பணியாளர் ஒருவர் ஒருவர் கொரொனா தொற்று பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவது பலராலும் பாராட்டப்படுகிறது.

 

சைக்கிளை வேகமாக ஓட்டிச் செல்லும் இவர்தான் பெரியசாமி. கரூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றும் இவரின் சொந்த ஊர் கரூர் நகராட்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் அருகில் இருக்கும் காளிபாளையம். பொதுமுடக்கம் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

 

தினமும் சைக்கிளில் வேலைக்கு செல்கிறார் பெரியசாமி . தனது கிராமத்தில் இருந்து கரூர் செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது இவருக்கு. அங்கு சென்ற பிறகு கரூர் நகராட்சி பகுதியில் உள்ள பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட், கோவை சாலை, செங்குந்தபுரம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபடும் இவர் மாலை வரை பணி செய்த பின் மீண்டும் தனது சைக்கிளிலேயே கிளம்புகிறார்.

 

கொரொனா காலத்தில் மக்கள் வீட்டிலேயே பத்திரமாக இருக்க தங்களைப் பற்றி கவலைப்படாமல் நோய்த் தொற்றைத் தடுக்க 50 நாட்களுக்கும் மேலாக தினசரி 60 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று பணிபுரிந்து வரும் பெரியசாமி போது தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு பாராட்ட வார்த்தைகளே இல்லை .

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon