--- --:--:-- --

பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கு நிவாரணம்!

2

பதிவு செய்யப்படாத கைத்தறி நெசவாளர்களுக்கு 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கொரொனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட கைத்தறி நெசவாளர்கள் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 343 பேருக்கு தமிழக அரசு இரண்டு தவணைகளாக ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது.

 

தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யப்படாத நெசவாளர்கள் தங்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த கோரிக்கையை ஏற்று அமைப்புசாரா கைத்தறி நெசவாளர்களுக்கு 2,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon