--- --:--:-- --

சி.பி.எஸ்.இ – ஜூலை.1 முதல் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் !

3

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை முதல் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு அட்டவணை பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டார்.

 

மாணவர்கள் தனித்தனியாக கிருமிநாசினி பாட்டில்களைக் கொண்டு வரவேண்டும், முக கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர் என அவரவர் பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார். சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்புக்கான ஒரு பகுதி தேர்வுகள் ஏற்கனவே நடந்து விட்ட நிலையில், கொரொனா ஊரடங்கு காரணமாக அவை தள்ளி வைக்கப்பட்டன. தற்போது தலைவர்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மீதி உள்ள தேர்வுகளும் நடைபெற உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon