சுற்றிவரும் சுகாதார கேடு, ஆபத்தில் வாழும் மக்கள் – நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் !
மானாமதுரை பகுதியில் உள்ள கிராமத்தில் பல்வேறு சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதால் நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது. தெ.புதுக்கோட்டை கிராமம். இங்குள்ள புதுக்கோட்டை தெருவை அருகே கால்வாயில் தொடர்ந்து பராமரிப்பு இல்லாததால் சூழலால் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அசுத்தமான பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் உள்ளதால், அப்பகுதி மக்கள் அனைவருக்கும் சுகாதாரம் கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.மேலும் அதே தெருவில் விநாயகர் கோயில் அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டி சின்டெக்ஸ் சாய்ந்து விழும் நிலையில் சாய்வாக உள்ளது. அங்கு போடப்பட்ட சிமெண்ட் ஆன தளமும் பெயர்ந்து பள்ளம் குழியுமாக இருக்கின்றன. அந்த சின்டெக்ஸ்ல் மக்கள் குடி தண்ணீர் பிடிக்கின்றன குழந்தைகள் அவ்வப்போது அங்கு கூடுகின்றன. இதனால் உயிர் சேதம் ஏற்படலாம்.
வேறு வழி இல்லாததால் மக்கள் அச்சத்துடன் அங்கு தண்ணீர் பிடிக்கின்றன. பள்ளம் குழியுமாக தளம் இருப்பதால் மழைக்காலங்களில் முற்றிலும் சேதமடையும் நிலையில் உள்ளது.

மேலும் விநாயகர் கோயில் அருகில் பழமையான ஆலமரம் பல ஆண்டுகளாக இருக்கின்றது அதன் அடியில் மண் அமைக்கப்பட்டு பிடிமானம் ஆக இருந்தது தற்போது அந்த மரத்திற்கு அடியில் பிடிமானமாக இருந்த மண்ணை சிலர் தங்களின் சுய லாபத்திற்க்காக மண்களை சுரண்டி அதன் அடி வேர் வெளியில் தெரியும் நிலையில் வைத்துள்ளனர். மழை நேரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாயும் நிலையில் தற்போது அந்த ஆலமரம் உள்ளது இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வெயிலுக்கு இளைப்பாற அமருகின்றன சிறு குழந்தைகள் அதன் கீழ் விளையாடுகின்றன.
கோவில் சாமி கும்பிட வரும் மக்கள் பயத்துடன் சாமி கும்பிட வருகின்றனர் இதனால் மக்கள் அதிகம் அச்சப்பட்டு நடக்கின்றனர். அந்த வழியாக செல்லும்போது இது குறித்து உரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இங்கு வசிக்கும் மக்கள் உயிருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






