தோல்வியடைந்த 9,11ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுவாய்ப்பு!
ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வியடைந்த 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் நடத்தப்பட்ட தேர்வுவுகளில் பெரும்பாலான மாணவர்கள் தோல்வி அடைந்ததால் மறு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை பரிசீலித்து சிபிஎஸ்சி வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஏற்கனவே நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் தோல்வி அடைந்த 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதால் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.






