--- --:--:-- --

பிரதமரின் உரையால் இந்தியா ஏமாற்றம் அடைந்துள்ளது !

3

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்களை நிறுத்த செய்யும் வகையில் பிரதமரின் உரை இல்லாததால் இந்தியா ஏமாற்றம் அடைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பிரதமர் உரை நாட்டிற்கும் ஊடகங்களுக்கும் வெறும் தலைப்பு செய்தியாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மக்களுக்கு முன் வந்து உதவ அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தாலும் காங்கிரஸ் கட்சி வரவேற்பு இருக்கும் என்று கூறினார்.

 

லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்களை போக்க செய்யும் வகையில் பிரதமர் மோடியின் உரை இல்லாததால் இந்தியா ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். இதேபோன்று ராஜஸ்தான் முதலமைச்சர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மனீஷ் திவாரி, அபிஷேக் எம்பி ஆகியோரும் பிரதமரின் உரையை விமர்சித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon