பிரபல பாலிவுட் நடிகை ஊர்வர் டிக்டாக்கில் நடன வகுப்புகள் நடத்தி 5 கோடி ரூபாய் நிதி திரட்டி கொரொனா நிவாரணத்துக்காக வழங்கியுள்ளார். ஊரடங்கால் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வரும் கூலித் தொழிலாளர்களுக்கு நடிகர் நடிகையர் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
அந்த வகையில் பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரௌதேலாவும் 5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார். உடல் எடையை குறைப்பதற்காக இணையதளத்தில் இவர் நடத்திய நடன வகுப்புகளின் வீடியோக்கள் டிக் டாக் செயலி மூலம் ஏராளமானவரை சென்று அடைந்த நிலையில் அதன் மூலம் கிடைத்த 5 கோடி ரூபாயை அவர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.