--- --:--:-- --

4 ஆம் கட்ட ஊரடங்கு மே 18 ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியாகும்!

1

கொரொனாவால் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரொனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

 

கொரொனா வைரஸ் தொடர்ந்த போரால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் நாம் ஒருங்கிணைந்து வெற்றி பெற வேண்டிய தருணம் இது என வலியுறுத்தினார். ஒருவனால் முடங்கி இருக்க முடியாது என்றும் நம்மை தற்காத்துக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டிய சூழல் உருவாகி இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

கொரொனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு தன்னிறைவு அடைவது தான் ஒரே வழி எனவும் y2k பிரச்சனையை எப்படி கடந்து வந்தோமோ அதேபோல இந்த சிக்கலையும் கடக்க முடியும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிற நாடுகளை சாராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என்று 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.கொரொனாவால் ஏற்பட்டிருக்கும் இழப்பை சரிசெய்ய பொருளாதார சிறப்பு திட்டங்களுக்கு 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று அது குறித்து நிதியமைச்சர் வரும் நாட்களில் விவரிப்பார் என தெரிவித்துள்ளார்.

 

எல்லாத் துறைகளையும் கருத்தில் கொண்டு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும் எனவும் அனைவரும் இதன்மூலம் பயனடைவார்கள் என்றும் பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% கொரொனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர் நான்காம் கட்ட ஊரடங்கு குறித்து மே 18க்குள் அறிவிக்கப்படும் எனக்கூறி பிரதமர் தமது உரையை முடித்து கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon