கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய இராமநாதபுரம் போக்குவரத்து காவலர் மலர் தூவி வரவேற்ற ஆய்வாளர் மற்றும் காவலர் குடும்பங்கள்
கடந்த மாதம் இராமநாதபுரத்தில் காவலர், தீயணைப்பு வீரர் மற்றும் சுகாதார பணியாளர் என ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் இராமநாதபுரத்தை சேர்ந்த 30 வயது காவலர் பனைக்குளம் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் சோகையன்தோப்பை சேர்ந்த தீணைப்பு வீரர், சூரங்காட்டுவலசையை சேர்ந்த சுகாதார ஊழியர் ஒருவர் என 3 பேருக்கும் மேற்கொண்ட பிசிஆர் சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது
ஆகையால் 3 பேரும் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் பணிபுரிந்த இடங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்நிலையில் சிவகங்கையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் குணமடைந்து இராமநாதபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்புக்கு வருகை தந்தார்

இதனையடுத்து இராமநாதபுரம் போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார், காவல் நிலைய எழுத்தர் உடன் பணிபுரியும் காவலர்கள். மற்றும் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்கள் குடும்பங்கள் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.






