--- --:--:-- --

குழந்தையின் கண் முன்னே பெற்றோர் கொடூரக் கொலை !

2

கரூர் மாவட்டம் மணப்பாறையை அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்த ரங்கநாதன் ஏ‌சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். மனைவி தீபிகா, 4 வயது மகள், மனநிலை பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்த ரங்கநாதனுக்கும் அவரது சித்தி மகன்கள் மூன்று பேருக்கும் நீண்ட நாட்களாக நில தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

திங்கட்கிழமை இரவு ரங்கநாதன் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் அவரையும், தீபிகாவையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி சென்று உள்ளது. அருகில் குடியிருப்புகள் இல்லாத தோட்டப் பகுதியில் தனியாக அமைந்துள்ள வீடு என்பதால் கொலையானவர்களின் அலறல் சத்தமும் வேறு யாருக்கும் கேட்கவில்லை.

 

தன் கண்முன்னே அரங்கேறிய இந்த பயங்கரத்தை பார்த்து மிரட்சியில் இருந்து சிறுமி கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த செல்போன் மூலம் உறவினருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. விரைந்து வந்த உறவினர்கள் வெள்ளியணை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். நிலத்தகராறில் ரங்கநாதனின் சித்தி மகன் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon