55 நாள்களாக டெல்லி விமான நிலையத்தில் தங்கியிருக்கும் ஜெர்மானியர்!

சொந்த நாடு திரும்ப விரும்பாமல் டெல்லி விமான நிலையத்தில் ட்ரான்ஷீட் பகுதியில் ஜெர்மானியர் ஒருவர் கடந்த 55 நாட்களாக தங்கி இருக்கிறார். வியட்நாம் நாட்டின் ஹானோய் நகரில் இருந்து விமானத்தில் டெல்லி வழியாக துருக்கியின் இசாங்கூர் செல்ல ஜெர்மனியில் 40 வயதான எட்கார்ட் ஜிபாட் மார்ச் 18ம் தேதி வந்தார்.

 

இந்த நிலையில் கொரொனா பரவலை தடுக்க மார்ச் 18ம் தேதி முதல் துருக்கி உடனான விமான போக்குவரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனையடுத்து சர்வதேச விமான போக்குவரத்தையும் ரத்து செய்தது. இதனால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 55 நாட்களாக வசிக்கிறார்.

 

நாட்டை விட்டு வெளியேறும்படி அவருக்கு நோட்டீஸ் அழிக்கப்பட்டுவிட்டது. ஜெர்மன் தூதரகமும் உதவ முன்வந்தது. ஆனாலும் அந்த உதவியை மறுத்து சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்கிய பிறகு செல்வதாக அவர் தெரிவித்து விட்டார்.


Leave a Reply