--- --:--:-- --

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என ரஜினியின் கருத்தை ஆமோதிக்கின்றேன் – சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி

14

சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 500 பேருக்கு தலா 10 கிலோ அரிசியினை தனது சொந்த செலவில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வழங்கினார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், பூரண மதுவிலக்கு உலகம் முழுவதும் தோல்வியடைந்த திட்டமாகவே உள்ளது. மதுவிலக்கை அமல் படுத்தினால் கள்ள சாராயம் பெருகும், மாபியா கும்பல் தலையெடுக்கும் என எச்சரித்தார். மதுவிற்பனையை பணமில்லா பரிவர்த்தனையில், மேற்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என ரஜினி கூறிய கருத்தை ஆமோதிக்கிறேன். மதுக்கடையை மூடினாலும், மூடாவிட்டாலும் பல்வேறு காரணங்களால், மீண்டும் அடுத்த முறை இவர்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற கனவை அறவே மறந்துவிட வேண்டும் என உறுதியாக தெரிவித்தார்.

ரயில், பேருந்து போக்குவரத்தை தொடர்ந்து தான் ஆகவேண்டும், இதில் வல்லுனர்களின் கருத்துகளை செயல்படுத்த வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon