--- --:--:-- --

தமிழகத்தில் கொரோனா தொற்று 8002 ஆக அதிகரித்து வரும் நிலையில் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் 2051 ஆக உயர்ந்துள்ளது!!!

12

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதில் சென்னையில் கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடி வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரில் சென்னையில் மட்டும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் 97 பேருக்கும்,செங்கல்பட்டில் 90 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அரியலூரில் 33 , திருவண்ணாமலையில் 10 ,காஞ்சிபுரத்தில் 8 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், மதுரை,ராமநாதபுரத்தில் தலா நால்வருக்கும்,தஞ்சை மற்றும் தூத்துக்குடியில் தலா 3 பேருக்கும்,தர்மபுரியில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர்,ராணிப்பேட்டை,வேலூர்,விருதுநகரில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று மட்டும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது.

 

மேலும்,கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 8002 ஆக அதிகரித்துள்ள நிலையில் பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் 2051 ஆக உயர்ந்துள்ளது.அதாவது பாதிக்கப்பட்டோரில் சுமார் 25.6 சதவீதம் பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.மீண்டு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் தமிழகம் மீண்டு விடும் என்ற நம்பிக்கையை மக்களிடையே விதைத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon