மருத்துவரின் காதைக் கடித்த நபர்!
ஒடிசா மாநிலம் கான்பூரில் மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்து வந்த நபர் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து ஆத்திரத்தில் மருத்துவரின் காதை கடித்து விட்டார். மருத்துவர் ஷகீல் கான் அவரை உள்ளே விட மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் மருத்துவரின் காதை பலமாக கடித்துவிட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு உருவானது.
மேலும் சில மருத்துவர்களையும் அந்த நபர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்த மருத்துவர்கள் அந்த நபரை கைது செய்ய கோரி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதையடுத்து அந்த நோயாளியின் உறவினர் கைது செய்யப்பட்டார்.







