--- --:--:-- --

வீட்டின் கூரையை உடைத்துக் கொண்டு நுழைந்த மான்! வைரலாகும் வீடியோ!

11.1

மும்பையில் தப்பியோடி வந்ததாக கருதப்படும் புள்ளிமான் குடிசை வீட்டின் கூரையை உடைத்து கொண்டு வீட்டிற்குள் அடைக்கலமான செய்தி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்பை போவாய் பகுதியில் இருக்கும் ஹனுமான் தேக்கடியில் ஏராளமான குடிசைகள் உள்ளன.

 

இதில் ஒரு வீட்டின் கூரையை உடைத்து கொண்டு உள்ளே விழுந்த மானை அதிகாலையில் கண்ட வீட்டினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே சமையல் எல்‌பி‌ஜி அடுப்புக்கு அருகே மான் அமர்ந்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகின.

 

அருகிலுள்ள சிறுமலை ஒன்றில் இருந்து சிறுத்தை போன்ற மிருகத்தின் தாக்குதலில் இருந்து தப்பி வந்த மான் ஆக இருக்கலாம் என தெரிவித்த வனத்துறையினர் அதனை மும்பை சஞ்சீவ் காந்தி தேசிய பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon