10 மாநிலங்களில் புதிதாக கொரோனா பாதிப்பில்லை : ஹர்ஷ்வர்தன்
10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணிநேரங்களில் புதிதாக கொரொனா பரவல் பதிவாகவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியின் மண்டோலி பகுதியில் இருக்கும் கொரொனா சிகிச்சை மையத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் நான்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இதுவரை ஒருவர் கூட கொரொனாவால் பாதிக்கப் படவில்லை என்றார்.
மத்திய அரசு தரப்பில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் இதுவரை 72 லட்சம் என்95 முகக் கவசங்கள், 35 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் 4,362 கொரொனா சிகிச்சை மையங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.







