--- --:--:-- --

கள்ளக் காதலனுடன் சென்ற மனைவி! ரவுடி படுகொலை!

25

கள்ளக்காதல் விவகாரத்தில் பஞ்சாயத்து பேச வந்த ரவுடியை சகோதரர்கள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.இவர்தான் கொலை செய்யப்பட்ட திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுள்ளான் ரமேஷ். ரவுடியான இவர் நண்பர்களின் தனிப்பட்ட வாழ்வில் தலையிட்டு பஞ்சாயத்து செய்ய முயன்றவர். கொலை செய்யப்பட்டது ஏன்?

 

வேடப்பட்டி யை சேர்ந்த வினோவின் மனைவி ரூபிணி. வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு 6 மாதங்களுக்கு முன்பு தனது கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார். அப்போது இந்த விவகாரம் பெரிய பிரச்சினையாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டைசன் வினோத் தனது சகோதரர் ஜான் வினோவுடன் செல்லும் போது மனைவி பிரிய காரணமாக இருந்த ரஸ்புதின் வேடப்பட்டி பகுதியில் பார்த்துள்ளார்.

 

பார்த்ததும் தன் மனைவி வேறு ஒரு ஓடிப் போவதற்கு நீதான் காரணம் உன்னை தான் இத்தனை நாட்களாக தேடி வந்தோம் என்று கூறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயத்துடன் தப்பி ஓடியுள்ளார் ரஸ்புதின். மேலும் தாக்கப்பட்டது தொடர்பாக தனது நண்பரான ரவுடி சுள்ளான் ரமேஷுடன் கூறி புலம்பியுள்ளார்.

 

ஏற்கனவே கொலை கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சுள்ளான் ரமேஷ் கண்டிப்பாக நம்மை ஏதாவது செய்து விடுவான் என சகோதரர்கள் அச்சப்பட்டனர். இதனால் சுள்ளான் ரமேஷ், மற்றும் அவனையும் கொலை செய்ய டைசன் சகோதரர்கள் திட்டமிட்டனர். அவனிடம் சமாதானம் பேசுவது போல் பேசி அவனை கொலை செய்ய திட்டமிட்ட சகோதரர்களையும் பாரதிபுரத்தில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு வியாழன் இரவு வரை சொல்லியுள்ளனர்.

 

சமாதானம் பேசி சகோதரர்கள் இருவரிடமும் பணத்தை கறந்து விட வேண்டியதுதான் என்று ரமேஷ் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு வந்து சேர்ந்த சகோதரர்கள் மற்றும் வினோத்குமார் ஆகியோர் மற்றும் சுள்ளான் ரமேஷ் ஆகியோர் இடையே பஞ்சாயத்து பேசப்பட்டது. சமாதான பேசுவது போல் திடீரென டைசன் குழுவினர் ரமேஷை பிடித்து சரமாரியாக குத்தியுள்ளனர்.

 

இதில் படுகாயம்அடைந்த சுள்ளான் ரமேஷ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார். மேலும் ரமேஷுடன் வந்த அவரது நண்பர் கூறி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். வெள்ளிக்கிழமை காலை கருப்பசாமி கோவில் மைதானத்தில் சுள்ளான் ரமேஷ் சடலமாகக் கிடப்பது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து சடலத்தை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடர்ந்தனர். ரமேஷின் செல்போன் அழைப்புகளை வைத்து அவருடன் கடைசியாக பேசிய அவரது நண்பர்ரஸ்புதீனை பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் நடந்த உண்மைகள் தெரிய வந்தது.

Leave a Reply

Right Menu Icon