--- --:--:-- --

தெய்வங்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் விஜய் சேதுபதி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

1

இந்து மத தெய்வங்களை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் விஜய் சேதுபதி மீது இந்து மக்கள் முன்னணி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி கோவில்களில் அபிஷேகம் செய்வது குறித்து பேசியதை குறிப்பிட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக கூறி விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் அவர் தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளை விளம்பரத்திற்காக உள்நோக்கத்துடன் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon