தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு!
தமிழகத்தில் மதுக் கடைகள் திறக்கப்படும் முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில் நாளை மற்றும் கடைகள் திறக்க முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ் ட்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கொரொனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில் மதுக்கடைகளை திறக்கும் தமிழக அரசின் செயலை கண்டிப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மது குடிக்காமல் இருந்து விடலாம் என எண்ணியவர்களுக்கு மீண்டும் மது குடிக்க வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மக்களின் சமூக பொருளாதார நிலைமையை கருத்தில் கொள்ளாமல் மதுக்கடைகளை திறப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
ஊரடங்கு பணியில் உள்ள காவலர்களை மதுக்கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வைப்பது பணிச்சுமையை அதிகரிப்பதோடு அவர்களை கேவலப்படுத்துவதாகும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்திருக்கிறார்.






