கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 6 காவலர்கள் ” டிஸ்சார்ஜ் “. மாவட்ட ஆட்சியர்,சிட்டி கமிஷனர் கலந்து கொண்டு பழக்கூடைகளை கொடுத்து,கைகளை தட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர் !!!
கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இதன் தாக்கம் சற்று அதிகரித்து கொண்டே வருகிறது.பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 527 ஆக உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 266 பேரும்,கடலூரில் 122 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் நேற்று கொரோனா தொற்றால் எவரும் பாதிக்கப்படவில்லை.இதுவரை 133 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இன்னும் 11 பேர் மட்டுமே கோவையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த காவலர்கள் 6 பேர் மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒருவர் என 7 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி,மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பூரண குணமடைந்து ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டவர்களுக்கௌ பழக்கூடைகளை கொடுத்தும்,கைகளை தட்டியும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.இந்நிகழ்வில் காவல் துறையினர், பி.எஸ்.ஜி.மருத்துமனை நிர்வாகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







