மகாராஷ்டிராவில் உணவின்றி தவிக்கும் தமிழக இளைஞர்கள்…!
மகாராஷ்டிர மாநிலத்தில் உணவின்றி தவிக்கும் தமிழக இளைஞர்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
சிவகங்கை, இராமநாதபுரம், சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களில் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக மார்ச் மாதம் சென்றுள்ளனர்.
பொதுமக்கள் வேலை இழந்தவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். காவல்துறையின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள அந்த இளைஞர்களுக்கு கொரொனா இல்லை என்று தெரியவந்துள்ளது.
இருப்பினும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க எந்த நடவடிக்கையும் அந்த மாநிலத்தில் மேற்கொள்ளவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.







