--- --:--:-- --

பணப் புழக்கத்தை சமாளிக்க ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதுதான் தீர்வா?

12

ஊரடங்கு காரணமாக உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது தான் தீர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்த நிதியாண்டில் 18 லட்சம் கோடி ரூபாய்க்கு நிவாரணங்கள் தேவைப்படுவதால் ஏறத்தாழ எட்டு லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை ஏற்படவுள்ளதாக கணிக்கப்படுகிறது. இதனை சந்தைகள் ஈடு செய்ய முடியாது என்று கூறப்படுகிறது.

 

வங்கிகளின் வட்டி விகிதங்கள் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. தனியார் மற்றும் இதர தொழில் துறையினருக்கு வங்கி கடன் மறுக்கப்படலாம். எனவே இந்தப் பிரச்சினையை ஈடுகட்ட ரிசர்வ் வங்கி அதிகமான ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது தான் தீர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

 

வழக்கமான கட்டுப்பாடுகளும் நடவடிக்கைகளும் உதவாது என்பதால் போர்க்கால அடிப்படையில் ரிசர்வ் வங்கி துணிந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றன.

Leave a Reply

Right Menu Icon