--- --:--:-- --

மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்த்து கைதானவர்களில் 5 பேர் ஜாமீன் கோரி மனு

6

மருத்துவர் உடலை அடக்கம் செய்வதை எதிர்த்து போராட்டம் நடத்தி கைதானவர்களில் ஐந்து பேர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னையில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாக 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் 22 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

17 வயது சிறுவன் ஒருவன் தலைமறைவானதாக கூறப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்ட அவர்களில் 5 பேர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். மனுவில் சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கலையரசன் தங்களுக்கு எதிராக தவறாக புகார் அளித்து இருப்பதாகவும் அந்த புகாரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து இருப்பது தவறு என்றும் அந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

வீட்டில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த தங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்திருப்பதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

கொரொனாபரிசோதனைக்காக மத்திய பிரதேசத்தில் இருந்து ரத்த மாதிரிகள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன . மத்திய பிரதேசத்தில் இருந்து கொரொனா பாதிப்பு உள்ளதா என சந்தேகிக்கப்படும் 1,555 பேர் மாதிரிகள் பரிசோதனைக்காக தனி விமானம் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் தற்போது மூன்று பேர் மட்டுமே கோரினால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon