புனேவில் 2 மணி நேரம் மட்டுமே கடைகளை திறக்க அனுமதி
மராட்டிய மாநிலம் புனே முழுவதும் கட்டுப்பாட்டுப் பகுதியாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்துவதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து மக்கள் வெளியே வர தடை விதித்துள்ள போலீசார் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதுடன் கடைகள் இரண்டு மணி நேரம் மட்டுமே திறக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் சமூக இடைவெளியை அலட்சியப்படுத்திவிட்டு மக்கள் கடைகளில் முண்டியடித்துக்கொண்டு பொருட்களை வாங்கினார். புனே மற்றும் சுற்றுவட்டாரத்தில் 756 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் 50 பேர் அதற்கு பலியாகியுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







