தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா உறுதி..! சென்னையில் பாதிப்பு விர்ரென உயர்கிறது!!
தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக இன்று 55 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு விர்ரென உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1520-ல் இருந்து 1596 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் ஒரே நாளில் 55 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 358 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசியில் 5 , விழுப்புரம் 4, தஞ்சை மற்றும் செங்கல்பட்டில் தலா 3 , கள்ளக்குறிச்சியில் 2 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




