--- --:--:-- --

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும்..! மே 3-ந் தேதிக்குப் பின் அட்டவணை..! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

3

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும், தேர்வுக்கான அட்டவணை மே 3-ந் தேதிக்குப் பின் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டதால் 9-ம் லகுப்பு வரை பள்ளி இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டும் நடத்தி முடிக்கப்பட்டன.11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சில பாடங்களுக்கு மட்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனால்10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மொத்தமாக இன்னும் நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டே வருகிறது.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வி அமைச்சர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுதான் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியது. அதனால் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும். மே 3-ந்தேதி ஊரடங்கு முடிவடைந்தவுடன் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும்.

 

ஒவ்வொரு பாடத் தேர்வுக்கும் இடையே ஒரு நாள் விடுமுறை இருக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்படும். பிளஸ் டூ கடைசித் தேர்வில் 36 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காததால் அவர்களுக்கு மட்டும் மீண்டும் தேர்வு நடத்தப்படும். பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணியும் மே 3-ந் தேதிக்குப் பிறகு நடைபெறும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon