--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா..! திருப்பூரில் அதிகபட்சமாக 28 பேர் பாதிப்பு..! 2 நாட்களாக உயிரிழப்பு இல்லை!!

9

தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் உயிரிழப்பு ஏதுமில்லை என்று சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கனிசமாக உயர்ந்து வருகிறது. இந்த மாதத்தில் 15 மற்றும் 16-ந் தேதிகளில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்த நிலையில் நேற்று 56 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1323 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளதாக, சென்னையில் செய்தியாளர்களைச்
சந்தித்த அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

 

அவர் மேலும் கூறுகையில், இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக 28 பேர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சென்னையில் 7, தென்காசி 4, பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

தமிழகத்தில் நேற்றும், இன்றும் உயிரிழப்பு இல்லை என்றும், இன்று மட்டும் 82 பேர் குணமடைந்து, இதுவரை மொத்தம் 365 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர் வரும் நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகமாகும் எனவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon