இருக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருவர் வழிப்பறி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணிடம் இருவர் வழிப்பறியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்தப் பெண் சங்கிலி பறிப்பு அச்சத்தால் தனது செயினை கழற்றி கையில் வைத்திருந்ததாகவும் அதை கொள்ளையர்கள் பறித்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் நேற்று சூளைமேட்டில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற நபரை துரத்தி பிடித்த போலீசார் அந்த நபர்தான் திருமங்கலத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதை கண்டு பிடித்தனர். மேலும் அந்த நபர் திருமங்கலம் காவல் நிலைய பெண் காவலரிடம் சூளைமேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் அயனாவரத்தில் புதிய வகை பல்சர் பைக்கை திருடியது தெரியவந்தது.

 

அவனிடமிருந்து பெண் காவலரின் சங்கிலியையும் பல்சர் பைக் கையும் பறிமுதல் செய்த போலீசார் மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.


Leave a Reply